நான் நாட்டு சட்டத்திற்கல்ல கட்டுப்படுவேன் ஷரியா சட்டத்திற்கே நீதிமன்றத்ததை அதிர வைத்த ISIS இளைஞ்சர்


ISIS அமைப்பிற்கு பணம் வழங்கிய கூறப்படும்  வழக்கு கடந்த 13ம் திகதி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதன் போது சம்பந்தப்பட்ட இளைஞர் நான் சிங்கப்பூர் சட்டத்திற்கு அல்ல, ஷரியா சட்டத்திற்கே நான் கட்டுப்படுவேன் என அவர் தெரிவித்து நீதிமன்றத்தை அதிர வைத்தார்.

குறிப்பு :

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ISISபயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட உதவும் வகையில், துருக்கியில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்ததாக 36 வயது இம்ரான் காசிம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது இம்ரான் காசிம் கூறியாதவற்றது (என்னால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாது. ஏனென்றால் நான் சிங்கப்பூரின் சட்டத்தை மதிப்பவன் அல்ல. இஸ்லாமிய சட்டத்தை மட்டும் மதிக்கிறேன்) என்றார் இம்ரான் காசிம்.

இதில் இம்ரான் காசிம் தான் இஸ்லாமிய சமயத்தில் ஷாரியா சட்டத்துக்கு மட்டும் தாம் கட்டுப்படுவதாக இம்ரான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மற்றும் பணம் அனுப்பியதை ஒப்புக்கொள்கிறேன்என்று இம்ரான் தெரிவித்தார்.


கடந்த 2014ம் ஆண்டு ISIS   பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கையை அச்சிட துருக்கியில் உள்ள ஒருவருக்கு $450 அனுப்பியதாக இம்ரான் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது அல்சையத் அல்மிதான் என்ற நபரிடம் வெஸ்டர்ன் யூனியன் குளோபல் கட்டமைப்பு மூலம் இம்ரான் பணம் அனுப்பியதாக நம்பப்படுகிறது.

பயங்கரவாதம் ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகலாவிய சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூர் அதன் கடமையை உணர்ந்து செயல்படுகிறதுஎன்று அரச சட்டத்தரணி நிக்கலஸ் கூவும் ஃபூ ஷி ஹாவும் தெரிவித்தனர்.

ISIS    பயங்கரவாதத்துக்குப் பலன் தரவும், ஆதரவு திரட்டவும், அது பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ளவும் கொடுக்கப்படும் பணம் உதவும் என்று தெரிந்தே இம்ரான் பணம் அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.
2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியன்று இம்ரான் பணம் அனுப்பியதற்கான சான்றை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அதில் இம்ரான் கைப்பட எழுதிய குறிப்பும் கையெழுத்தும் இருந்தன. இம்ரான் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விலகிக் கொண்டனர். தற்போது அவர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை. அவரே அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.அரசு சட்டத்தரணிகள் முன்னிலைப்படுத்திய சாட்சிகளிடம் இம்ரான் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ISIS    பயங்கரவாத அமைப்பைத் தவிர மற்ற அமைப்புகளும் இஸ்ரேலும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலின்கீழ் வருகின்றனவா என்று இம்ரான் கேள்வி எழுப்பினார்.தம்மிடம் பணம் பெற்றுக்கொண்டவர் அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் என்பதை வர்த்தக விவகாரத் துறை எவ்வாறு உறுதி செய்தது என்று இம்ரான் கேள்வி கேட்டார்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பே தமது கைகளில் ஏன் விலங்குகள் மாட்டப்பட்டன என்று இம்ரான் கேட்டபோது, பாதுகாப்பு நிமித்தம் அவ்வாறு செய்யப்பட்டதாக நீதிபதி பதிலளித்தார்.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.வெளிநாடுகளின் ஆயுதப் போராட்டத்தில்  ஈடுபட அவர் நோக்கம் கொண்டிருந்ததால் அவருக்கு எதிராகத் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டது.


வழக்கு விசாரணைக்கு இம்ரானின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். ISIS அமைப்புக்கு உன் மீது அக்கறை இல்லைஎன்று அவர்களில் ஒருவர் இம்ரானிடம் கூறியபோது, சிங்கப்பூர் அரசாங்கத்துக்குத்தான் அக்கறை இல்லை என்றும் ISIS அமைப்புக்கு எதிரான போரில் அது ஈடுபட்டதாகவும் இம்ரான் கூறினார்.


குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்க இம்ரானின் குடும்பத்தினர் கோரியபோது, குடும்பத்துக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும், எப்படியிருந்தாலும் தம்மைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றும் இம்ரான் கூறினார்.

இதற்காண தீர்ப்பு நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என சிங்கப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments