உயிர் கொல்லி கொவிட் -19 வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் முதலாவது மரணம் !!! இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் ...........

உயிர் கொல்லி கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் தொற்று தென் கொரியாவிலும் குறிப்பிட்டளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 52 பேர் இனங்காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அந்நாட்டில் தற்போது 156 பேர் கொவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் முதலாவது மரணமும் பதிவாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொவிட் - 19 வைரஸ் தொற்று தொடர்ச்சியாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தென் கொரிய அரசு விசேட வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் அந்நாட்டின் டேகு மற்றும் சிமன்க்டோ நகரங்களை விசேட பிரதேசங்களாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தென் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் தங்கியுள்ளதாக அந்நாட்டு இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கையர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் தொழிலாளர் நல ஆலோசகர்  தெரிவித்தார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments