20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் ஜப்பானில் கைது!

மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இலங்கையர் மேலும் இருவருடன் இணைந்து வேறொரு நபரின் கடனட்டை மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டின் இப்பாரகீ மாநிலத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 40 ஆயிரம் லீற்றர் வரை எரிபொருளை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் டோக்கியோ பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்த மாநிலத்தின் 10க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4 மில்லியன் ஜப்பான் யென்னுக்கும் அதிக பெறுமதியான எரிபொருளை பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர் 20 வயதுடைய இளைஞன் என குறிப்பிடப்பட்டுள்ளது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments