111AAA

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்த இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்கள் கைது!!!!!

இலங்கை மீனவர்கள் மூவர்  இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டததால்   இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 15ம் திகதி  அதிகாலை மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற லூவாஸ் அலோசியல, சுகந், சகாய வின்ஸ்ரோ ஆகிய மூன்று மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த போது சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களின் படகுகளும் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து  பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments