111AAA

சீனா நாடு விடுத்துள்ள அறிக்கை !!! உலக மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை .......

கோவிட் 19 வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. தற்போது, நாள் ஒன்றிற்கு கோவிட் 19 இனால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும், விரைவில் முழுமையாக நாடு விடுதலை பெறும் என்றும் அந்நாடு தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உற்பத்தியாகிய  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 2150 இற்கும் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில்  கோவிட்19 வைரஸ் 27 நாடுகளில் பரவியுள்ளது. ஆனாலும், நாள் ஒன்றிற்கு 1693 பேர் வரை புதிதாக பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தற்போது வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால் 349 புதிய நோயாளிகள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. நாள் ஒன்றிற்கு 132 ஆக இருந்து வந்த பலி எண்ணிக்கை, தற்போது 108 ஆக குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ந்து 3 நாட்களாக நோயால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சீன நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஹூபியில் கொரோனா பரவுவதை பெரிய அளவில் குறைந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 வைரஸ் காரணமாக ஈரானில் 2 பேரும், ஜப்பானின் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேரும் உயிரிந்துள்ளனர்.

தென் கொரியாவில் ஏற்கனவே 82 பேர் பலியாகி உள்ள நிலையில் 31 பேருக்கு புதிதாக கோவிட் 19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments