தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்கள்; விபரம் உள்ளே >

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது.

இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று 5ம் திகதி நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்வதற்காக தபால் ஊழியர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் நிவாரண வட்டியில் கடன் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோன்று மாதத்துக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தபால் அலுவலகங்களில் வசதிகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதேபோன்று தபால் அலுவலகங்கள் மூலம் துரிதமாக பொதிகளை அனுப்புவதற்காக ளுpநநன pழளவ என்ற பெயரில் தபால் பொதி சேவை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உத்தேச துரித பொதி விநியோக தபால் சேவை கொழும்பு, நுவரொலியா, காலி, கண்டி ஆகிய தபால் அலுவலகங்கள் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் 5000 தபால் கிளைகளை உள்ளடக்கிய வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டில் இருந்து அலிபாவா எமெசன் போன்ற நிறுனங்கள் மூலம் அனுப்பப்படும் பொதிகள் அதன் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. தாபல் அலுவலகத்துக்கு பொதிகளை கையளித்தவர்களுக்கு அவை விநியோகிக்கப்பட்ட பின்னர் குறுஞ்செய்தி மூலம் அது தொடர்பாக வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். துரித தபால் பொதி சேவையின் மூலம் தபால் திணைக்களத்துக்கு பாரிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments