புதுவருட நிவாரணம் வழங்கும் முயற்சியை தடுத்த எதிர் கட்சியினர் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!!!!!


எதிர்வரும் புதுவருட காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்துவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"இலங்கை கிராம சேவகர்கள் சங்கம்" ஏற்பாட்டில் நேற்று கண்டியில் நடைபெற்ற 'இலங்கை கிராம சேவகர்கள் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு தற்போது தயாரிக்கப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் அதனை சட்டமாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.





இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர்களான திரு. மஹிந்தானந்த அளுத்கமகே, திரு. லொஹான் ரத்வத்தே, திரு.கெஹலிய ரம்புக்வல்ல, திரு. திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.அனுராத ஜயரத்ன, திரு.ஆனந்த அலுத்கமகே மற்றும் பிரபல தொழில் அதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments