இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !!!!

மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பில் ஹேப் 115 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இசுரு உதான 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49. ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டி கொழும்பு  S .S .C .மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments