மாணவர்களின் திறமைகள் இனம் காணப்பட்டு அதற்கேற்ப அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும் - ஏ.எல்.எம். பாரிஸ் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட வேட்பாளர்)

மாணவர்களின் தனித்துவமான திறமைகளை இணங்கண்டு அவர்களை அத்துரையில் வழிநடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் தலைவரும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  சார்பில் வேட்பாளராக களமிறங்கவுள்ளவருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் தெரிவித்தார்.

கண்டி - களுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் 7ம் திகதி நேற்றைய  தினம் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாறுகையில் மாணவர்கள் அனைவரும் சரி சமமான திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். அதே போல் அனைவரும் கல்விக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருக்க மாட்டார்கள். சிலரிடம் ஆக்கத் திறன் இருக்கும் இன்னும் சிலரிடம் விளையாட்டுக்களில் அதீத திறமை இருக்கும். இப்படி கல்விஇ ஆக்கம்இ விளையாட்டு  மற்றும் தொழில்நுட்ப கலைகள் என பல திறமைகளைக் கொண்டவர்வர்களாகவே மாணவர்கள் இருப்பார்கள்.

பலவீனமான காரணங்களை சொல்லி அவர்களின் திறமைகளுக்கு தடையாக இறாமல்இ திறமைகள் இனம் காணப்பட்டு அதற்கேற்ப மாணவர்கள் வழிநடத்தப்பட்டால் எதிர்காலத்தில் பல துறைகளிலும் திறமையானவர்களா அவர்களால் சமுதாயத்தில் மிலிர முடியும் என ஏ.எல்.எம்.பாரிஸ் அவர்கள் தெரிவித்தார்.

தகவல்
ஊடகப் பிரிவு,


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments