இரு சிறுமிகள் உட்பட மூவர் மீது பாலியல் வன்புணர்வு!!!! வவுனியாவில் சம்பவம்!!! அதிர்ச்சியில் உறவினர்கள்.

இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வவுனியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மூவரும் நேற்று 15ம் திகதி  வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த வன்புணர்வு சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது !!!

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த உறவினர் ஓருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி  உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று  15ம் திகதி மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட  உறவினரான 30 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவருடைய தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வு குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுமற்றுமின்றி மற்றுமோர் சம்பவம் மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஓருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சிறுமியின் தந்தையான 39 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments