புதுக்குடியிருப்பு கைவேலி, கணேசா வித்தியாலய மைதானத்தில் படையினரால் புதைக்கப்பட்ட வெற்று வெடிபொருள் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு கைவேலி, கணேசா வித்தியாலய மைதானத்தில் படையினரால் புதைக்கப்பட்ட வெற்று வெடிபொருள் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு, கைவேலி கணேசா வித்தியாசாலையில் ஜனாவரி 31ம் திகதி விளையாட்டுப் போட்டிக்காக கொடிகம்பம் நாட்டுவதற்கு கிடங்கு தோண்டிய போது பெட்டிகளில் அலவாங்கு குத்தி சத்தம் கேட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடத்தினை அடையாளப்படுத்தி உள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பெப்ரவரி 01ம் திகதி அன்று குறித்த பகுதியினை உடனடியா அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டு நேற்று 02ம் திகதி  சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியினை அகழ்ந்த போது 81 மில்லி மீற்றர் எறிகணைகள் வைக்கும் 13 பெட்டிகள் மண் போட்டு நிரப்பப்பட்ட நிலையில் நிலத்திற்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினர் குறித்த பகுதினை துப்பரவு செய்து அகழ்வு செய்த இடத்தினை மூடிவிட்டு வெறும் பெட்டிகளையே எடுத்து சென்றுள்ளார்கள்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் காட்டுப்பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 18 கைக் குண்டுகள் மீட்கப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


Ada Derana සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments