111AAA

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், மதத்தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்ளை கௌரவிக்கும் விழா.

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், மதத்தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்ளை கௌரவிக்கும் விழா ஒன்றினை புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு நேற்று 20ம் திகதி  வியாழக்கிழமை கொழும்பு வீதி நாகவில்லில் அமைந்திருக்கும் "Whaite Receptio Hall" லில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவையின் தெரிவுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 130 சமாதான நீதிவின்கள் மற்றும் சர்வ மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு "Dr.C.W.W. கண்ணங்கரா-2020" சமாதான நீதிவான்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கபட்டனர்

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ. சந்திரசிறி பண்டார,புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எச்.௭ம்.எஸ். ஹேரத்,புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எம். நிமல் பெரேரா, புத்தளம் மாவட்ட காதி நீதிபதியும், சட்டத்தரணியுமான ஏ.எம்.எம்.எஸ். அப்துல் காதர், மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் மேலதிக சிரேஷ்ட்ட செயலாளர் ஏ.ஆர்.எம். மலிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் கல்பிட்டி சின்னக்குடியிருப்பை சேர்ந்த கல்பிட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சமூக சேவகர் எனது நெருங்கிய நண்பருமான அகில இலங்கை சமாதான நிதவான் உபைதுல்லாஹ் ஜனாப் அவர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

(ரிஸ்வி ஹுசைன்)



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments