தனது மாமியை கொள்ள முயன்ற 14 வயது சிறுவன் !!!!! பொலிஸார் வெளிட்ட அதிர்ச்சித்தகவல் புத்தளத்தில் சம்பவம்.

தனது மாமியை கொலை செய்ய முற்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்

தனது மாமியை கொலை செய்ய பால் மற்றும் குடிநீரில் விஷத்தை கலந்து மாமியிடம் கொடுத்துள்ளான்.

இந்த  சந்தேகநபரான சிறுவனின் மாமியால் கடந்த 2ம் திகதி பொலிஸில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாத்தன்டிய, பஹல தப்போவ, பாணதுர தோட்டத்தை சேர்ந்த குறித்த சிறுவனுக்கு பெற்றோர் இல்லாதததால் அவர் தனது மாமியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

மேலும், குறித்த சிறுவன் பாடசாலை செல்வதில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 05 ஆம் திகதி சிறுவனின் மாமிக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது, அவரின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.பின்னர், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை நிறைவடைந்து வீடு வந்த பெண், சந்தேகநபரான சிறுவனை அழைத்து இது தொடர்பில் வினவியுள்ளார்.இதன்போது, சம்பவம் தொடர்பில் சிறுவன் விவரித்துள்ளான். அதன்படி சம்பவம் தொடர்பில் சிறுவனின் மாமி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், சந்தேகநபரான சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த போது, மாமியின் சித்திரவதைகளை தாங்கிக் கொள்ளமுடியாமல் அவர் அருந்தும் பால் மற்றும் குடிநீரில் விஷம் கலந்ததாக சிறுவன் கூறியுள்ளான்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments