இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 650 பேர் உயிரிழந்துள்ளனர்.


இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 650 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஏற்கனவே 1,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் அங்கே 375 பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடிவருகின்றது.
இத்தாலியில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தமுடியாத நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை அங்கே 5,476 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிக்கப்பட்டவர்களிம் எண்ணிக்கை 59,138 ஆக உயர்ந்துள்ளது.


இத்தாலியில் கரோனா வைரஸ்
இத்தாலியில் பிப்ரவரி 21-ம் தேதி தான் கரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்தது.

சீனாவில் அப்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இப்போது சீனாவை விட அதிக அளவிலான பாதிப்புகளை சந்தித்து வருவது இத்தாலி தான்.

அங்கே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் 23,7783 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 19,846 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உடல்நிலை மோசமான நிலையில் 3,009 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 7,024 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகள் உயிர்காக்கும் கருவிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் போதிய அளவு இல்லாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.Post a Comment

0 Comments