கொரோனாவை ஒழிக்கும் அரசின் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்!!

கொரோனா வைரஸ் கிருமித் தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக, கிருமி தொற்று மக்களிடம் பரவாமல் இருப்பதற்காக இந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமே நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம்.

குறிப்பாக; மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்ப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும். எனவே எந்த வகையிலும் நாம் ஒன்றுகூடவதை தவிர்த்து, கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும் அரசின் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கை வாழ் முஸ்லிம் உறவுகளை!
நாம் ஐங்கால கடமையான தொழுகையை இந்த நிர்ப்பந்தமான சூழ்நிலையில் பள்ளிவாசலில் இமாம் ஜமாத்தோடு தொழுவதை தவிர்ப்பதில் இறைவன் எம்மை குற்றம் பிடிக்க போவதில்லை. அத்துடன் எமது கடமைகளை நாம் வீட்டிலிருந்து செய்து கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே மார்க்க கடமைகளை காரணம் காட்டி "ஒருபோதும் நாம் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்" என்ற உணர்வை வெளிக்காட்டும் விதமாக பள்ளியில் இமாம் ஜமாஅத் தொழுகைக்கு அல்லது ஜும்ஆவுக்கு அல்லது வேறு தேவைகளுக்கு பொது இடங்களில் ஒன்று கூடுவோம் என்றால் இந்நாட்டு அரசு எமது நலன்கருதி எடுத்த தீர்மானத்தை நாம் மதித்தவர்களாக ஆக முடியாது.

ஒரு வகையில் எமது சமூகத்திற்கு ஒரு சோதனையாக இந்த நிலைமை அமைந்திருந்தாலும் இன்னொரு வகையில் வீட்டிலிருந்து குடும்ப உறவுகளோடு நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டு மார்க்க கல்வியை வளர்த்துக்கொண்டு வீட்டுச் சூழலில் மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இறைவன் தந்த ஒரு சந்தர்ப்பமாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எம்.எஸ்.எம். ஸப்வான்,
(புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்)


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments