சிறுவர் துஸ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த காலங்களில் இணையத்தில் வௌியான சிறுவர் துஸ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த காணொளி இணையத்தில் பரவியமை தொடர்பில் இணைய ஆய்வினை மேற்கொண்டு சந்தேகநபர்களை இனங்காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல், சந்தேகநபர்களை கைது செய்வதை விரைவு படுத்துவதற்காக இணையத்தில் பரவிய காணொளியில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த காணொளியில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு  தொலைப் பேசி  மூலம் அழைப்பை மேர்கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 077 78 78 414 , 071 82 64 024.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments