எமக்கு சுமார் ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் இயலுமை உள்ளது!!!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால் நிலைமையை சமாளிக்கும் வகையில் சுமார் ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க கூடிய இயலுமை உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் கடந்த 11ம் திகதி  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட கூடிய நிலைமை மற்றும் அவசரகால நிலைமை பிறப்பிக்கப்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமைச்சர்கள், செயலாளர்கள், தொழிற்சங்க பிரதநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவலால் ஆடை தொழிற்துறைக்கு சுமார் 500 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


அவசர நிலைமைகளின் போது முக கவசங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments