நீர்க்கொழும்பு பெரியமுல்ல மோதல் சம்பவத்தில் ஒருவர் பலி - CCTV காணொளி வௌியானது. வீடியோ காட்சி உள்ளே .....



நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்றிரவு 09ம் திகதி  9.30pm  மணியளவில் வருகை தந்த குழுவினர் அங்கு மோதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தில் எவ்வித இனவாத செயலும் இல்லை என மேல் மாகாண மற்றும் சுற்றுசூழல் மற்றும் சமூக பொலிஸிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ.டீ. தென்னகோன் தெரிவித்திருந்தார்.

பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்றிரவு 09  9.30pm  மணியளவில் வருகை தந்த 6 பேர் கொண்ட குழுவொன்று குறித்த ஹோட்டலில் மது அருந்த முயற்சித்துள்ள போது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக D.M.W.D தென்னகோன் அத தெரணவிற்கு தெரிவித்திருந்தார்.பின்னர் குறித்த குழுவினர் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மோதலின் போது உரிமையாளரையும் மற்றும் அதன் ஊழியர்கள் சிலரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 5 பேர் படுகாயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அதில் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயதுடைய கனேவெல்பொல, கெகிராவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.


மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments