இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!!!!!

COVID 19 கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

COVID 19 கொரோனா தொற்றை கண்டறிவதற்கான PCR பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு 3 நிபந்தனைகளை அரசாங்கம் விதித்துள்ளது.

1. இது ஸ்கீன் ரெஸ்ட் அல்ல.

2. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

3. நோயை அடையாளம் கண்டு அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்தின் தொற்றுநோய் ஆய்வு பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி பரிசோதனைக்கு உட்படுத்துவோர் விபரங்கள் பரிசோதனைக்கு முன்னதாக எமது பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பரிசோதனை நிறைவடைந்த பின்னர் முழுமையன அறிக்கையை எமது பிரிவற்கு அறிவிக்க வேண்டும்.

24 மணித்தியாலத்துக்குள் பரிசோதனை தொடர்பான அறிக்கையை நோயாளிக்கு வழங்க வேண்டும்.

இத்துறையை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரின் பொறுப்பில் இது நடத்தப்படவேண்டும்.

நோயாளியின் சளி எமது ஆய்வு பிரிவிற்கு ஒப்படைக்கப்படவேண்டும். இந்த பரிசேதனைக்காக 6,000 ரூபா மாத்திரமே அறவிடப்படவேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கான அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments