111AAA

மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

வட மாநிலங்களில் கோடைக்கால மழை பெய்து வருகிறது. பீகாரில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் போஜ்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பாதிப்பு குறைவாக இருந்தது என மாநில பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயம் அடைந்த 8 பேர் சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Post a Comment

0 Comments