111AAA

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு!!!

நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கும வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தமது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments