111AAA

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வர அமைச்சரவை அனுமதி!!!

விசா காலம் முடிவடைந்தும் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரான தெரிவித்துள்ளார்.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (06)ம் திகதி  கொழும்பில் நடைபெற்றது.



இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.



தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் தங்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இலங்கைக்கு வருகை தர விரும்பும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



அதற்கமைய அடுத்த வரும் சில நாட்களில் மாலைத்தீவு, குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.



விசா காலாவதியான பின்னரும் அந்தந்த நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை இலவசமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விமான பயண சீட்டை பெற்றுக் கொடுக்க சில நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து அவர்களை தனிமைப்படுத்தப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்த அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments