111AAA

காதல் விவகாரத்தால் மோதல்...! அசிட் வீச்சில் இளைஞர் பலி - இரு பெண்கள் காயம்...! இலங்கையில் சம்பவம் !!!!

#கரந்தெனிய மற்றும் #குளியாப்பிட்டிய பிரதேசங்களில் புதன்கிழமை இடம்பெற்றுள்ள மோதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளார்.

இரு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கரந்தெனிய – திவ்யகஹவெல பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் மின்சார இணைப்பொன்றை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

இந்த இணைப்பில் சிக்குண்டு மின் தாக்குதலுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அந்த நபரிடம் வினவுவதற்காக உயிரிழந்த நபருடன் இன்னும் சிலரும் சென்றுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்தே கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் போரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண்கள் இருவரும் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குருணாகல் – மல்கடுவாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-செய்தியாளர் - ஹாசீம் சஜீத்-

Post a Comment

0 Comments