111AAA

சிறு குழந்தைகள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் குறித்து விசாரணை

சமூக ஊடகங்களில் தற்போது பரவும் சிறு குழந்தைகள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியவர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனம் காணப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்

Post a Comment

0 Comments