111AAA

சஹ்ரான் பயிற்சி வழங்கிய மற்றுமொரு விடுதி சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (08) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களையடுத்தே இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியில் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேபோன்று அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடுதியில் பெண்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments