111AAA

ஹை - டெக் பொடி கமராக்களை வழங்கி இலங்கை பொலிஸினரை வலுவூட்டிடும் மொபிடெல்

கொவிட் - 19க்கு எதிரான தேசத்தின் போராட்டத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பினையும் ஆதரவினையும் வழங்கிட தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் இலங்கை பொலிஸ்க்கு உடலில் பொருத்தக்கூடிய அதிநவீன கமராக்களை அறிமுகப்படுத்தியது. பொலிஸ் பார்க் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பொலிஸ் இன் பிரதி பொலிஸ் மாஅத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் அவர்களுடன் பொலிஸ் மற்றும் மொபிடெல் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்காகவும் இலங்கை மக்களை பாதுகாத்திடவும் பலமணிநேரங்கள் சோதனைச் சாவடிகளை நிர்வகிக்கும் காவல் துறையினரின் தொடர்ச்சியான முயற்சியை பாராட்டிட வேண்டும் என்று கருதிய மொபிடெல் அவர்களுக்கு ஆதரவளித்திடும் வகையில் நிதி நன்கொடையொன்றினை வழங்கியது. இப்பங்களிப்பானது சவாலான நேரத்தில் இலங்கையர்களுக்கு அதன் மாறுபட்ட டிஜிட்டல் ரீதியான சுகாதார மற்றும் சிறந்த மொபைல் அனுபவத்தினைப் பெற உதவுவதோடு முப்படை மற்றும் சுகாதார துறையுடன் கூட்டிணைந்து செயற்படுவதன் மூலம் தேசத்தின் நெருக்கடியான காலகட்டத்தில் மொபிடெலின் உறுதியான அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நெருக்கடியான தருணத்தில் நாட்டு மக்களை பாதுகாத்திடும் அரசாங்கத்தின் பொறுப்பினை இலகுபடுத்திட மொபிடெல் பல்வேறுவிதமான டிஜிட்டல் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்கிறது. அக்கறையுள்ள மொபைல் வலையமைப்பு வழங்குனர் என்ற வகையில் மொபிடெல் தமது சிறப்பு பக்கேஜ்களை விஷேட முற் கொடுப்பனவு திட்டங்கள் முதல் போனஸ் டேடா சேர்த்தல் (Bonus Data add-ons), இலவச சுகாதார ஆலோசனை சேவைகள் டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகள் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான 100% தரவு நீட்டிப்பு சேவைகள் வரையிலான மேலும் பலவற்றை வழங்குகிறது. மேலும் COVID-19 பற்றிய விழிப்புணர்வினை ஏற்;படுத்துவதற்கு மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை பொது மக்களிடையே பகிர்ந்து கொள்வதற்கு மொபிடெல்ரூபவ் உலக சுகாதார தாபனம் (WHO), UNICEF மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியான நேரத்தின் போது மொபிடெல் தமது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது நாட்டில் வாழும் ஏனையோருக்கும் வலிமை மற்றும் அடைக்கலத்தின் தூணாக நிரந்தரமாய் இருந்திடும்.

Post a Comment

0 Comments