111AAA

துஸ்பிரயோக குற்றச்சாட்டில் இராணுவ பொலிஸ் வீரர் ஒருவர் விளக்கமறியலில்

இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி அம்பகாவத்தை நேற்று முன்தினம் (03) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நுவரெலியா சிறுவர் கிராமத்தை சேர்ந்த பெண் பிள்ளை (வயது 14) ஒருவரை இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த இராணுவ பொலிஸ் வீரர் நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று (03.05.2020)  நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி அம்பகாவத்தை முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பொழுதே பதில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கருதப்படுகின்ற சிறுமி தற்பொழுது நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 01.05.2020 அன்று தான் தங்கியிருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து தப்பிவந்துள்ளார்.

இவரை கண்ட குறித்த இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்தர் அவரை அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் சிறுமி தங்களுடைய சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் 01.05.2020 அன்று நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பிரவில் தமது முறைப்பாட்டை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments