111AAA

தனிமைப்படுத்தலில் இருந்த #வயோதிபப் #பெண் மரணம்...!

#கொரோனா தொற்றுக்குள்ளான #கடற்படை #வீரரின் #பாட்டியாம்...!


#கேகாலை - #அரநாயக்க பகுதியில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

#வெலிசறை #கடற்படை #முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே  அரநாயக்க பகுதியில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும் உயிரிழந்த வயோதிப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை

 கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த கடற்படை சிப்பாய் கடந்த மாதம் 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு சென்று 27 ஆம் திகதி மீண்டும் வெலிசறை கடற்படை முகாமுக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் குறித்த சிப்பாய்க்கு கடந்த 28 ஆம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைபடுத்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் (01) உயிரிழந்த கொழும்பு குணசிங்கபுரவை சேர்ந்த இரண்டு முதியவர்களினதும் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்ட முதியவர் ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

 நீண்ட இடைவெளியின் பின்னர் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் குறித்த இரு சடலங்களையும் தகனம் செய்ய முள்ளியவளை பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.

இதேவேளை இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 718ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 172 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

செய்தியாளர் - ஹாசீம் சஜீத்-


Post a Comment

0 Comments