111AAA

இளைஞன் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த காரணத்தால் முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை!

புத்தளம்) –  முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

காய்ச்சல் காரணமாக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த  இளைஞன் ஒருவர் இவ்வாறு உயிரிழந்தமையால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்  இழந்த இளைஞன் மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய    இளைஞனே  இவ்வாறு   உயிர் இழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த உயிர் இழப்பின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Tamil fast news) 

Post a Comment

0 Comments