111AAA

அலிசப்ரியை அவசரமாக சந்தித்த ACMC தலைவர் ரிஷாத் பதியுதீன்

31 வருடத்திற்கு பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து முதற் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அலிசப்ரி ரஹீமுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (07) மாலை புத்தளத்திலுள்ள அலிசப்ரி ரஹீமின் அலுவலகத்திற்கு நேரில் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், புத்தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பிலும் கட்சியின் தலைவரான ரிஷாத் பதியுதீனுடன் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அலிசப்ரி ரஹீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய முஸ்லிம் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 33,509 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments