111AAA

தேர்தல் பெறுபேறுகள் வெளியான மறுநாளே கே.ஏ.பாயிஸ் எடுத்த அதிரடி முடிவு!

விடுமுறையில் இருந்த புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் இன்று வெள்ளிக்கிழமை (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்காக நகர பிதா பாயிஸூக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் நடந்து முடிந்த தேர்தலில் கே.ஏ.பாயிஸ் வெற்றிபெறாத நிலையில், இன்றைய தினம் (07) புத்தளம் நகர சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நகர சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments